ஆசிய விளையாட்டில் வெற்றி பெறாமலேயே தங்கம் வென்ற இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதுடன், இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
கிரிக்கெட் இறுதிப் போட்டி
ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதின.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் 52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
மழை குறுக்கீடு
எனினும் ஷஹிதுல்லா கமல், குல்பதின் நைப் அணியை மீட்க போராடினர். அணியின் ஸ்கோர் 18.2 ஓவர்களில் 112 ஆக இருந்தபோது மழை குறுக்கிட்டது.
கமல் 49 (43) ஓட்டங்களுடனும், நைப் 27 (24) ஓட்டங்களுடனும் களத்தில் நின்றனர். அர்ஷ்தீப், தூபே, ஷாபாஸ் மற்றும் பிஸ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மழை நீடித்ததால் ஆட்டம் கைவிடப்படுத்தாக அறிவிக்கப்பட்டது. எனினும், சர்வதேச தரவரிசையில் இந்திய அணி முன்னிலை வகிப்பதால் தங்கம் வென்றதாக அறிவிப்பு வெளியானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |