விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இதை கற்றுக் கொண்டேன்: இந்திய வீரர் சுப்மன் கில்
எப்படி டாட் பால்களை குறைப்பது, ஓவருக்கு ஓவர் பவுண்டரி அடிப்பது என்பதை கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இரண்டாவது முறையாக 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் இலங்கை அணியின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில், 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என விளாசி 92 பந்துகளில் 92 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து விராட் கோலி சதமடிப்பார் என ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்த போது அவரும் 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ரோகித், கோலியிடம் இதை கற்றுக் கொண்டேன்
இந்நிலையில் போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில், விராட் கோலியிடம் இருந்து எப்படி டாட் பந்துகளை குறைப்பது, எப்படி தொடர்ந்து சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுப்பது மற்றும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிப்பது என்பதை கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவின் புல் ஷாட்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அத்துடன் ரோகித் சர்மாவிடம் இருந்து எப்படி அதிரடி ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
Semis ✅?? pic.twitter.com/PcmbMMSc5h
— Shubman Gill (@ShubmanGill) November 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |