முகேஷ் அம்பானியை விட... இந்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீடு மிகவும் பெரியது: யார் இவர்
ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் பிரபலமான ஆன்டிலியா குடியிருப்பை விடவும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு சொந்தமான குடியிருப்பானது பரப்பளவில் மிகவும் பெரியது என கூறப்படுகிறது.
கிரிக்கெட் விளையாடிய இளவரசர்
முன்னாள் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் மொத்த சொத்துமதிப்பு 1,000 கோடி என சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மிகவும் செல்வந்தர் விராட் கோஹ்லி என்றே தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடம் இருந்து ஆண்டுக்கு 7 கோடி ஊதியமாக பெறுகிறார் விராட் கோஹ்லி. அத்துடன் RCB அணி நிர்வாகத்திடம் இருந்து ஆண்டுக்கு 15 கோடி வரையில் ஊதியமாக ஈட்டுகிறார்.
இந்த வரிசையில், முன்னாள் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் மொத்த சொத்துமதிப்பு 1,250 கோடி எனவும் எம்.எஸ் தோனியின் சொத்துமதிப்பு 1,040 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்தியாவின் மிகவும் செல்வந்தரும் இளவரசருமான ஒருவர் கிரிக்கெட் விளையாடியுள்ள காலகட்டம் குறித்து பரவலாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தான் சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட்.
மன்னர் குடும்பத்தில் பிறந்த இவர் குஜராத்தின் பரோடா குறுநிலத்தின் மன்னராகவும் இருந்துள்ளார். இவர் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரராக இருந்தார் மற்றும் பிரபலமான ரஞ்சி கிண்ணம் தொடரில் பரோடா அணிக்காக களமிறங்கியுள்ளார்.
இந்தியாவின் அடையாளம் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை
மட்டுமின்றி டாப்-ஆர்டர் துடுப்பாட்ட வீரராக ஆறு முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். 2012ல் தனது தந்தை காலமான பின்னர் சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் மன்னராகவும் முடிசூட்டப்பட்டார்.
இவருக்கு சொந்தமானது தான் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை. உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட குடியிருப்பு என்பதுடன் இது லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது எனவும் கூறப்படுகிறது.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனையானது 3,04,92,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் முகேஷ் அம்பானியின் பிரபலமான ஆன்டிலியா குடியிருப்பின் பரப்பளவு 48,7800 சதுர அடி.
லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் மொத்தம் 170 அறைகள் உள்ளது. மேலும் 1890ல் மகாராஜா முன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவரால் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |