இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்., இளம்பெண் கைது
இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் கார் மீது தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் (Prithvi Shaw) காரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ஓஷிவாடா பொலிஸார் வியாழக்கிழமை (பிப்.16) கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட பெண் சப்னா கில் (Sapna Gill) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக பிப்ரவரி 15-ஆம் திகதி இரவு நடந்த ஒரு சம்பவத்தில், சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் ப்ரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுப்பதற்காக சண்டையில் ஈடுபட்ட கூறப்படுகிறது.
Screenshot/PTI
பிருத்வி ஷா அவர்ளுடன் செல்ஃபி எடுக்க மறுத்ததோடு, ஷா தனது நண்பருடன் உணவருந்திய ஹோட்டலிலிருந்து அவர்களை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் நண்பரின் காரைத் தாக்கியதற்காக பிப்ரவரி 15-ஆம் திகதி புதன்கிழமை 8 பேர் மீது ஓஷிவாரா பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஷாவின் நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் அளித்த புகாரின்படி, முதலில் ஷாவை ஏற்றிச் சென்ற கார் பேஸ்பால் மட்டையால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காரைப் பின்தொடர்ந்து சென்று பணம் தராவிட்டால் பொய் வழக்கு போடுவதாகவும் மிரட்டினர்.
पापा की परी दारू पीकर अपने Boyfriend के साथ भारतीय बल्लेबाज़ @PrithviShaw को मिलकर फँसाना चाह रही थी। pic.twitter.com/kyEZAcQcIn
— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar) February 16, 2023
மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வெளியே பிருத்வி ஷாவும் அவரது நண்பர்களும் தன்னை உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
பிருத்வி ஷாவும் அவரது நண்பர்களும் அந்தப் பெண்ணைத் தாக்கியபோது, அவரது கையில் ஒரு கட்டையை வைத்திருந்ததாக அப்பெண் குற்றம் சாட்டினார்.
சப்னா கில்லின் வழக்கறிஞர் அலி காஷிப் கான், அவரை மருத்துவ பரிசோதனைக்கு செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை என்றும், மும்பையில் உள்ள ஓஷிவாரா காவல் நிலையத்தில் இருப்பதாகவும் கூறினார்.
Another video of prithvi shaw invident, which clearly shows that drunk influncer and their friends attack on prithvi shaw #PrithviShaw #Sapnagill pic.twitter.com/ND5tzRhD66
— Rahul? (@Rahultranic) February 16, 2023
சப்னா கில் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட தரப்பிலிருந்து குறுக்கு எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் தொடருக்குப் பிறகு போட்டி கிரிக்கெட்டிலிருந்து பிரித்வி ஷா ஓய்வில் இருந்தார். ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான டி20 அணிக்கு ஷா திரும்ப அழைக்கப்பட்டார். அனால், அவருக்கு playing XI அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.