இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கான் மருத்துவமனையில் அனுமதி: சிக்கலில் மும்பை அணி
இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை தொடங்கும் காலிறுதி போட்டிகள்
இந்தியாவின் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி தொடரின் காலிறுதி போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகிறது.
பிப்ரவரி 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறம் இந்த காலிறுதி போட்டியில் மத்திய பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், உத்தரகாண்ட், பெங்கால், ஆந்திரா, மும்பை மற்றும் கர்நாடகா ஆகிய 8 அணிகள் விளையாட உள்ளனர்.

சர்ப்ராஸ் கான் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் மும்பை அணிக்காக விளையாடி வந்த இந்திய வீரர் சர்ப்ராஸ் கான் வைரல் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள மும்பை அணிக்காக அவர் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்ப்ராஸ் கானின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், முழுமையாக குணமடைய குறைந்தது நான்கு நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷர்துல் தாகூர் தலைமையிலான மும்பை அணியை யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் வலுவாக இருந்தாலும், சர்ப்ராஸ் கான் இல்லாமல் அணியின் பேட்டிங் வரிசை குழம்பலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |