பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்? அவரே சொன்ன பதிலின் வீடியோ
பிரபல நடிகையை டேட்டிங் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில் பதிலளித்துள்ளார்.
சுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் ஒன்றாக உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் நடிகை சோனம் பாஜ்வா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சுப்மன் கில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது.
தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்
இதில் சுப்மன் கில்லிடம், பாலிவுட்டில் மிகவும் ஃபிட்டான நடிகை யார்?" என சோனம் பாஜ்வா கேட்க சாரா என்றும் கில் பதிலளித்தார்.
தொடர்ந்து, நீங்கள் சாராவை டேட்டிங் செயகிறீர்களா? என சோனம் கேட்கும் கேள்விகள் இருக்க, இருக்கலாம் என கில் சொன்னதும் மீண்டும், தயவு செய்து உண்மையை சொல்லுங்கள் என சோனம் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இறுதியில், நான் உண்மையை தான் சொல்கிறேன். இருக்கலாம், ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம் என சுப்மன் கில் பதில் சொன்னார், இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.