சச்சின் டெண்டுல்கருடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலியுடன் விளையாடிய ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர் அமய் குராசியா (Amay Khurasiya). சர்வதேச கிரிக்கெட் வீரரான இவர் 17 வயதில் முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். இது தவிர உள்ளூர் போட்டிகளில் திறமையான இடது கை பேட்ஸ்மேனாக விரைவில் அங்கீகாரம் பெற்றார்.
இவர் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், அஜய் ஜடேஜா, அனில் கும்ப்ளே போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடியுள்ளார்.
1999 ஆம் ஆண்டு பெப்சி கோப்பையில் இலங்கைக்கு எதிராக அறிமுகமான அமய் குராசியா, விறுவிறுப்பான அரைசதம் அடித்து நடுத்தர வரிசை பேட்ஸ்மேனாக அறிவித்தார்.
பின்னர், 1999 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டு இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக மாறினார்.
இவர் சர்வதேச வெற்றியை குறைவாக பெற்றிருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினார். மத்தியப் பிரதேசத்திற்காக 119 போட்டிகளில் விளையாடி 21 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள் உள்பட 7,304 ரன்கள் எடுத்தார்.
கிரிக்கெட்டிற்குப் பிறகு சிவில் சர்வீஸைத் தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்று இந்திய சுங்கம் மற்றும் மத்திய கலால் துறையில் ஆய்வாளராக உள்ளார்.
ரஜத் படிதர் மற்றும் அவேஷ் கான் போன்ற எதிர்கால திறமையாளர்களுக்கு குராசியா பயிற்சி அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |