பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி... கேக் விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்: அவரது சொத்து மதிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்களின் பிரபலத்தால் அடிக்கடி கவனத்தை ஈர்க்கிறார்கள்.
ஒருவரையொருவர்
ஒரு சிலர் தங்கள் கணவரின் புகழிலிருந்து விலகி தனித்தனியாக தனித்துவ அடையாளங்களை நிறுவியுள்ளனர். அப்படியான ஒருவர் மித்தாலி பருல்கர். இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரின் மனைவி.

கல்வியில் மட்டுமின்றி வணிக உலகிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டவர் மித்தாலி பருல்கர். 2023ல், ஷர்துல் மற்றும் மித்தாலி பருல்கர் திருமணம் நடந்தது. வெளியான தகவலின் அடிப்படையில், பள்ளி நாட்களில் இருந்தே ஒருவரையொருவர் அறிமுகமானவர்கள் என்றே கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான நட்பு ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. மித்தாலி ஒரு வணிகம் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர், அவரது தந்தை ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் ஒரு இல்லத்தரசி.
கார்ப்பரேட் உலகில்
வணிகவியல் படிப்பை முடித்த பிறகு நிறுவன செயலாளராக மித்தாலி பணியாற்றினார். கார்ப்பரேட் உலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், மித்தாலி பின்னர் தனது ஆர்வத்தைப் பின்பற்றி பேக்கிங்கில் இறங்கினார்.

தொடர்ந்து தனது சொந்த பேக்கரியான "ஆல் ஜாஸ் பேக்கரி"யை தானேயில் தொடங்கினார். தனது ஆடம்பர பேக்கரி வணிகத்தின் மூலம் ரூ.2-3 கோடி சொத்து மதிப்பை மித்தாலி உருவாக்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |