தொடக்கத்தில் புகழ்பெற்ற நட்சத்திர வீரர்கள்! பின்பு மோசமாக விளையாடி டம்மியான 2 இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி பல ஜாம்பவான்களை பார்த்துள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர்களே காலத்தால் அழிக்க முடியாத பெரும் புகழ்பெற்ற வீரர்களாக உயர்கிறார்கள்.
ஆனால் சில இந்திய வீரர்கள் அணிக்குள் வந்த பின்னர் முதல் சில போட்டிகளிலேயே அபாரமாகச் செயல்பட்டு, தனக்கான இடத்தை உறுதி செய்கிறார்கள்.
ஆனால் போகபோக படுமோசமாகச் சொதப்பி, வாய்ப்பை இழந்து காணாமல் போகிறார்கள்.
அப்படியான முக்கிய வீரர்கள் குறித்து பார்ப்போம்
பார்த்தீவ் பட்டேல்
15வது வயதில் கடந்த 2002ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பார்த்தீவ் பட்டேல் அறிமுகமானார். ஆரம்பத்தில் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராக அசத்திய பட்டேல் பின்னர் சொதப்ப தொடங்கினார்.
பின்னர் டோனி, தினேஷ் கார்த்திக் வருகையால் அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ஓய்வு பெற்றார்.
ராபின் உத்தப்பா
கடந்த 2006 ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகி முதல் போட்டிலேயே 86 ரன்கள் எடுத்து கெத்து காட்டினார்.
குறிப்பாக, 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 4/39 எனத் திணறிக்கொண்டிருந்தபோது, உத்தப்பா களமிறங்கி அரை சதம் அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் போட்டி டிரா ஆனது. இறுதியில் பௌல் அவுட் என்ற விதிமுறைப்படி இந்தியா வெற்றிபெற்றது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த உத்தப்பா, போகபோக படுமோசமாகச் சொதப்ப துவங்கினார். இதனால் அணியில் இடம்கிடைக்காமல் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.