இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருக்கு அறுவை சிகிச்சை! வெளியான புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
புனேவில் கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின் போது ஸ்ரேயாஸ் அய்யரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
