மன்னர் சார்லசைவிட பல மடங்கு சொத்து மதிப்பு கொண்ட இந்திய வம்சாவளியினர்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரித்தானிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்று.
மகாராணியாரை மிஞ்சிய மன்னர்
பிரித்தானிய மன்னரான சார்லஸ், தன் தாயாகிய எலிசபெத் மகாராணியாரை விட அதிக சொத்து மதிப்புடையவர். அவருடைய சொத்து மதிப்பு, 600 மில்லியன் பவுண்டுகள். மகாராணியாரின் சொத்து மதிப்பு 370 மில்லியன் பவுண்டுகள் என கடந்த ஆண்டு கணக்கிடப்பட்டது.
Image: AFP via Getty Images
மன்னரையே மிஞ்சிய குடும்பம்
ஆனால், மன்னரைவிட பல மடங்கு அதிக சொத்துடன், பிரித்தானிய பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளது இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்று.
ஹிந்துஜா குழுமம் என்னும் பெயரில் பல்வேறு தொழில்களுக்குச் சொந்தமான ஹிந்துஜா குடும்பத்தினரில் ஒருவரான கோபி ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 35 பில்லியன் பவுண்டுகள்.
Image: AFP via Getty Images
The Sunday Times Rich List என்னும் பிரித்தானியாவின் பணக்காரர்கள் பட்டியலில், இந்த ஹிந்துஜா குடும்பத்தினர் முதலிடம் பிடித்துள்ள நிலையில், மன்னர் சார்லசோ, பட்டியலில் 263ஆவது இடத்தில் இருக்கிறார்.
இன்னொரு விடயம், இந்த பட்டியலில் மற்றொரு இந்தியக் குடும்பமும் உள்ளது. ஆம், லக்ஷ்மி மிட்டல் குடும்பம், 16 பில்லியன் பவுண்டுகளுடன் பிரித்தானியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது..
Image: PA