ஈரான் போரில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு - பின்னணி என்ன?
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரான் போர்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஓமன் வளைகுடாவில், ஓமன் தலைநகரான மஸ்கட்டின் கடற்கரையில், MKD VYOM என அடையாளம் காணப்படும் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர் உயிரிழப்பு
அந்த கப்பலின் மீது ஈரானின் வெடிபொருளுடன் கூடிய ஆளில்லா படகு ஒன்று மோதி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர் குறித்த விவரம் வெளியாகவில்லை.
மேலும், கப்பலில் இருந்து 16 இந்தியர்கள், 4 வங்கதேசத்தவர், ஒரு உக்ரைனியர் உட்பட 21 பேர் பத்திரமாக மற்றொரு டேங்கர் கப்பல் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இது, தற்போதைய போர் தொடங்கிப்பட்டதிலிருந்து, ஓமனுக்கு அருகில் எண்ணெய் டேங்கர் கப்பல் தாக்கப்பட்ட 2வது நிகழ்வாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |