இந்திய மருத்துவருக்கு பிரான்சின் உயரிய விருது
The Consulate General of France in Bengaluru on Thursday honoured Dr Devi Shetty, with the Chevalier de l' Ordre national du Merite: Dr டேவி ஷெட்டி என்னும் இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கியுள்ளது.
பிரபல இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்திய மருத்துவருக்கு பிரான்சின் உயரிய விருது
இந்தியாவின் பெங்களூருவில் இயங்கிவரும் நாராயணா ஹெல்த் என்னும் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான Dr டேவி ஷெட்டி (Dr Devi Shetty) என்பவருக்கு, பிரான்சின் உயரிய விருதுகளில் ஒன்றான Chevalier de l' Ordre national du Merite என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் காலகட்டத்தில் பெங்களூருவில் வாழும் பிரான்ஸ் குடிமக்களுக்கு Dr டேவி வழங்கிய ஆதரவுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூருவிலுள்ள பிரான்ஸ் துணைத் தூதரகம் நேற்று Dr டேவிக்கு இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது.
விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது பேசிய பிரான்ஸ் துணைத்தூதரான மார்க் லேமி, Dr டேவிக்கு இந்த கௌரவத்தை வழங்குவதில் தாம் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
விருதைப் பெற்றுக்கொண்ட Dr டேவி, தனக்கு பிரான்ஸ் வழங்கிய இந்த விருது தன்னை கௌரவம் அடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெருந்தொற்று காலத்தில், பெங்களூருவில் உள்ள பிரான்ஸ் நாட்டவர்களுக்கு எங்கள் ஆதரவை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
அது அனைவருக்கும் ஒரு கடினமான நேரமாக இருந்தது, என்றாலும், ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவுவதே மிகவும் முக்கியமானதாக இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய எங்கள் குழுக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் Dr டேவி.