பாகிஸ்தான் வீரர் ரிஷ்வான் எனக்கு கொடுத்த பரிசு! ஐசியூவில் சிகிச்சையளித்த மருத்துவர் நெகிழ்ச்சி
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான முகமவது ரிஷ்வான் தனக்கு சிகிச்சையளிக்கு இந்திய மருத்துவருக்கு தன்னுடைய ஜெர்சியை பரிசாக கொடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நாளை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. இந்நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான முகமது ரிஷ்வான் 52 பந்தில் 67 ஓட்டங்கள் குவித்தார்.
ஆட்டம் துவங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, ரிஷ்வான் ஐசியூவில் நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அதில் இருந்து மீண்ட அவர் அரையிறுதிப் போட்டியில் தன் நாட்டிற்காக விளையாடியுள்ளார்.
இவரின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், முகமது ரிஷ்வான் தனக்கு சிகிச்சையளித்த Saheer Sainalabdeen-க்கு தான் கையெப்பமிட்ட தன்னுடைய ஜெர்சியை பரிசாக கொடுத்துள்ளார்.
இது குறித்து Saheer Sainalabdeen பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ரிஸ்வானுக்கு கடுமையான தொற்று இருந்தது. அரையிறுதிக்கு முன் அவர் உடற்தகுதி பெறுவது என்பது நினைத்துபார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.
ஆனால், அவருடைய உறுதியும், தைரியமும், நம்பிக்கையும் தான், அவரை விளையாட வைத்துள்ளது. சுமார் 35 மணி நேரம் அவர் ஐசியுவில் இருந்தார்.
இதனால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மோதலின் போது முழுமையாக குணமடைவார் என்ற நம்பிக்கை மருத்துவர்கள் எங்களுக்கு இல்லை. ஆனால், அவருடைய சகிப்புத் தன்மை, நம்பிக்கை தான் அவர் மீண்டு வர காரணம் என்று கூறியுள்ளார்.