பிரித்தானியாவில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட இந்திய இளைஞர்: மொத்தமாக நொறுங்கிப் போன குடும்பம்
பிரித்தானியாவில் வன்முறை குழு ஒன்றால் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய இளைஞர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் தங்கள் சோகத்தை பகிர்ந்துள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு
மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஒன்றால் ஆகஸ்டு 22ம் திகதி 23 வயதான ஔர்மன் சிங் என்ற இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
Image: SWNS
பொதி விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அந்த இளைஞர் பணியில் ஈடுபட்டு வந்த வேளையில் அந்த குழு பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதில் சம்பவயிடத்திலேயே அந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். ஷ்ரூஸ்பரி பகுதியில் நடந்த இச்சம்பம் தொடர்பில் ஔர்மன் சிங் குடும்பத்தினர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்னொரு குடும்பத்தினருக்கு நேர வேண்டாம்
தங்களுக்கு நேர்ந்த துயரம் இன்னொரு குடும்பத்தினருக்கு நேர வேண்டாம் என அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினர் விசாரணையை விடாமுயற்சியுடன் நடத்தி எங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் ஆதரவளித்ததற்காக நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Image: SWNS
இந்த வழக்கு தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளதாகவும் அதில் நால்வர் 20 வயது கடந்த நபர்கள் எனவும், பொலிஸ் விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலைக்கு பின்னால் எந்த நோக்கமும் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |