கனடாவில் விபத்தை ஏற்படுத்திய இந்தியர்... விரைவில் நாடுகடத்தல்
கனடாவில் விபத்தை ஏற்படுத்திய இந்தியர் ஒருவர் அகதியாக கனடாவில் தங்கியிருக்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
16 உயிர்களை பலிவாங்கிய விபத்து
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, கனடாவின் Saskatchewan பகுதியில், சித்து (Jaskirat Singh Sidhu) என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது பயங்கரமாக மோதியது.

அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். அந்த கோர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஆகவே, Sidhuவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் பயணிக்கும் சாலைக்கு குறுக்கே மற்றொரு சாலை குறுக்கிடுவதாக அறிவிப்பு பலகைகளும், மின்னும் விளக்குகளுடன் சிக்னல்களும் இருந்தும், தான் பிரேக் பிடிக்கவில்லை என ஒப்புக்கொண்ட Sidhu, தண்டனையையும் ஏற்றுக்கொண்டார்.
Sidhu கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர். பெடரல் சட்டத்தின்படி, நிரந்தர வாழிட உரிமம் பெற்ற ஒருவர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றால், தண்டனைக்காலத்திற்குப் பின் அவர் நாடு கடத்தப்படலாம்.
விரைவில் நாடுகடத்தல்
இந்நிலையில், பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் கொண்ட ஒரு குழந்தை சித்துவுக்கு இருப்பதால், மனிதநேய அடிப்படையில் தன்னை கனடாவில் வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார் சித்து.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க கனடா புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையம் மறுத்துவிட்டதாக சித்துவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஆகவே, சித்து விரைவில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என்றும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |