ஒரே நாளில் சில நிமிடங்களில் ரூ 1600 கோடி சம்பாதித்த தொழிலதிபர்... அவர் அம்பானி, அதானி அல்ல
Zomato நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான தீபிந்தர் கோயல் என்பவரே ஒரே நாளில் ரூ 1600 கோடியை சம்பாதித்துள்ளார்.
ஒரே நாளில் ரூ 1638.60 கோடி
ஆகஸ்டு 2ம் திகதி வெள்ளிக்கிழமை Zomato நிறுவனத்தின் பங்குகள் 19 சதவிகிதம் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
ஜூன் 30ம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் Zomato நிறுவனத்தின் நிகர வருவாய் என்பது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் ஆகஸ்டு 2ம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் ரூ 234.10 என இருந்த Zomato பங்குகளின் மதிப்பு ரூ 278.45 என உச்சம் தொட்டது. இதனால் தீபிந்தர் கோயலின் வருவாய் என்பது ஒரே நாளில் ரூ 1638.60 கோடிகள் அதிகரித்தது.
நிகர வருவாய் 12,650 சதவிகிதம்
ஜூன் 30ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில், Zomato நிறுவனத்தில் கோயலுக்கு 4.19 சதவிகித பங்குகள் உள்ளன. ஆகஸ்டு 2ம் திகதி Zomato நிறுவனப் பங்குகளின் மதிப்பு குதிக்க, இவருக்கு சொந்தமான பங்குகளின் மதிப்பு ரூ 10,288 கோடி என அதிகரித்தது.
மட்டுமின்றி, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் Zomato நிறுவனத்தின் நிகர வருவாய் என்பது 12,650 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு முதல் காலாண்டில் மட்டும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 75 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |