பிரான்சில் வாழும் தன் குடிமக்களுக்கு இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
Indian embassy issues safety advisory for citizens in France amid unrest: பிரான்சில் நிலவும் அமைதியின்மையைத் தொடர்ந்து, அங்கு வாழும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் பாதுகாப்பு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.
மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள், விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டங்கள் என பிரான்ஸ் கலவர பூமியாகிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், பிரான்சில் வாழும் தன் குடிமக்களுக்கு இந்திய தூதரகம் பாதுகாப்பு தொடர்பில் சில ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரான்சில் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும் உரிய முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறும், போராட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும் அறிவுரைகளையும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து இடையூறுகள் குறித்து தெரிந்துகொள்ளுமாறும், உள்ளூர் செய்திகள் மூலம் நேரத்துக்கு நேரம் தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறும், பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்துக்கொள்ளுமாறும் தன் குடிமக்களை இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், வரும் சனிக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 24ஆம் திகதி, மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த, அரசு கடும் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் செபாஸ்டியன் லெக்கார்னு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.