அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்து: ஒரு இந்திய வம்சாவளி குடும்பமே பலியான பரிதாபம்
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு முழுக் குடும்பமே பலியாகியுள்ளது.
சாலை விபத்தில் பலியான குடும்பம்
இந்தியாவின் தெலங்கானா மாநில பின்னணி கொண்ட வெங்கட் (Venkat Bejugam) என்பவருடைய குடும்பம் டெக்ஸாசிலுள்ள Sutton Fields என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தது.
இந்நிலையில், கடந்த வார இறுதியில் அட்லாண்டாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள் வெங்கட் குடும்பத்தினர்.
அப்போது, மினி ட்ரக் ஒன்று சாலையின் தவறான பக்கத்தில் வேகமாக வந்துள்ளது. அந்த ட்ரக் வெங்கட் குடும்பம் பயணித்த கார் மீது மோத, மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்துள்ளது.
இந்த கோர விபத்தில் வெங்கட், அவரது மனைவியான தேஜஸ்வினி (Tejaswini Cholleti) மற்றும் தம்பதியரின் பிள்ளைகளான சித்தார்த் மற்றும் ம்ரிதா (Mrida Bejugam) ஆகிய அனைவருமே உயிரிழந்துவிட்டார்கள்.
இந்த சம்பவம் அவர்களுடைய உறவினர்கள் மற்று நண்பர்களிடையே அதிர்ச்சியையும் கடும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |