பயங்கர விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்! பயிற்சிக்கு புறப்பட்ட போது நேர்ந்த துயரம்
இந்தியா விமானப்படைக்கு சொந்தமான MiG-21 விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
MiG-21 போர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட தகவளின் படி, இன்று காலை MiG-21 போர் விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது.
மத்திய இந்தியாவில் உள்ள விமான தளத்திலிருந்து போர் பயிற்சிக்காக புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இந்திய விமானப்படை, குழு கேப்டன் ஏ.குப்தாவை இழந்தது. கேப்டன் ஏ.குப்தா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம்.
விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்தியா விமானப்படை தெரிவித்துள்ளது.
The IAF lost Group Captain A Gupta in the tragic accident. IAF expresses deep condolences and stands firmly with the family members. A Court of Inquiry has been ordered to determine the cause of the accident.
— Indian Air Force (@IAF_MCC) March 17, 2021