ரிஷி சுனக் மனைவிக்கு $13 மில்லியன் தரும் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து செயல்படுகிறது! போருக்கு மத்தியிலும்
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியிலும் மாஸ்கோவில் தொடர்ந்து செயல்படும் இன்போஸிஸ் நிறுவனம்.
அந்த அலுவலகத்தில் ஊழியர்களும் இருப்பதாக தகவல்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு ஆண்டுக்கு $13 மில்லியன் டிவிடண்ட் தொகை வழங்கும் அவரின் தந்தைக்கு சொந்தமான இன்போஸிஸ் நிறுவனம் உக்ரைன் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இன்னும் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி நிறுவனமான இன்போஸிஸ் ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தது. ஆனால் தற்போது வரையில் ரஷ்யாவில் உள்ள அலுவலகத்தில் ஊழியர்கள் இருக்கின்றனர் எனவும் துணை ஒப்பந்ததாரர்களுக்கு நிறுவனம் பணம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி இன்ஃபோசிஸின் மாஸ்கோ அலுவலகத்தில் சுவரில் நிறுவனத்தின் பெயர் பலகை இன்னும் உள்ளதாகவும், ரஷ்யாவை விட்டு வெளியேறுவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக சில நிர்வாக ஊழியர்கள் இன்னும் அங்கு பணியாற்றி வருவதாக நிறுவனத்தின் வட்டாரங்கள் தி கார்டியனிடம் தெரிவித்தன.
sportsfinding