திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்
Indian man found dead in US home 17 days after marriage: திருமணமாகி 17 நாட்களே ஆன நிலையில் அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார் இந்தியர் ஒருவர்.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாபர் ஹுசைன் (28). உயர் கல்விக்காக 2021ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார் அவர்.
அமெரிக்காவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இந்தியர்
ஹைதராபாதைச் சேர்ந்த ஹுசைனுக்கு 17 நாட்களுக்கு முன்தான் திருமணம் ஆனது. அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதி டெக்சாஸில் ஹுசைனின் திருமணம் நடைபெற்ற நிலையில், தான் வாழும் Lowell என்னுமிடத்துக்கு சமீபத்தில்தான் திரும்பியிருந்தார் அவர்.

இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி, தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் ஹுசைன்.
அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து, அவரது மனைவி குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஹுசைன் குடும்பம் அந்த அளவுக்கு வசதியான குடும்பம் இல்லை என்பதால், அவரது உடலை இந்தியா கொண்டுவர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.