பட்டப்பகலில் 8 பேர் குழுவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்: பிரித்தானியாவில் சம்பவம்
பிரித்தானியாவில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் DPD சாரதி ஒருவர் மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
பொதுமக்கள் முன்னிலையில்
மெக்சிகோவில் போதை மருந்து குழுக்களால் நடத்தப்படும் படுகொலைக்கு நிகராக இச்சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
8 பேர்கள் கொண்ட குழு கோடாரி, ஹொக்கி மட்டை, கத்தி, கோல்ஃப் கிளப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் 23 வயதேயான ஔர்மன் சிங் என்பவரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்தனர்.
அந்த தாக்குதலில் அவரது இடது காது துண்டிக்கப்பட்டுள்ளது, மண்டை பிளந்து மூளை சிதைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ம் திகதி நடந்த இந்த கொடூர சம்பவமானது பாதுகாப்பு கமெரா மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கமெராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய இருவர், 24 வயதான மெஹக்தீப் சிங் மற்றும் 26 வயதான செஹஜ்பால் சிங் ஆகியோர் மூன்று வார கால விசாரணைக்குப் பின்னர் இந்த வாரம் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ஐவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்த வழக்கின் பின்னணி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு சம்பவம், ஔர்மனின் குடியிருப்புக்கும் 1 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு,
இன்னொன்று அவரது கொலைக்கு முந்தைய நாள் டெர்பியில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியில் மூண்ட மற்றொரு பெரிய சண்டை. ஆனால் கபடி விளையாட்டுப் போட்டியில் மூண்ட சண்டை காரணமாகவே ஔர்மன் சிங் பழிவாங்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு நம்புகிறது.
தாயாரும் சகோதரியும்
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஔர்மன் சிங் இத்தாலியில் பிறந்துள்ளார். பிரித்தானியாவில் அவரது 46 வயதான தாயார் மற்றும் சகோதரியுடன் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் ஸ்மெத்விக் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
ஔர்மன் சிங் கொல்லப்படுவதற்கும் ஒரு மாதம் முன்பு பஞ்சாபியர்கள் முன்னெடுத்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஆகஸ்டு 20ம் திகதி டெர்பியில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியைக் காண ஔர்மன் சிங் சென்றுள்ளார். அங்கே இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பத்தில் முடிந்துள்ளது.
ஆனால், ஔர்மன் சிங் அந்த சம்பவத்தில் தொடர்புடையவரா என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாகவே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும் 8 பேர்கள் கொண்ட இந்திய வம்சாவளி குழு ஒன்றால் ஔர்மன் சிங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது ஸ்மெத்விக் பகுதியில் இருந்து ஔர்மன்னின் தாயாரும் சகோதரியும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்ததாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |