கனடாவில் பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: குவியும் நன்கொடைகள்
கனேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக உதவி கோரப்பட்டுள்ள நிலையில், நன்கொடைகள் வந்து குவிவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்
கனடாவுக்கு புலம்பெயர்ந்த குர்சிம்ரன் கௌர் (Gursimran Kaur, 19) என்னும் இளம்பெண்ணும் அவரது தாயும், Halifaxஇல் அமைந்துள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் பணி செய்துவந்துள்ளார்கள்.
Maritime Sikh Society Executive/GoFundMe
கடந்த சனிக்கிழமை இரவு மகளைக் காணாமல் தேடிய அவரது தாய், குர்சிம்ரனுக்கு போன் செய்ய, அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
அப்படி தன் மகள் மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யமாட்டார் என்பதை அறிந்த அவரது தாய் மகளைத் தேடி அலைய, குர்சிம்ரன், ஆள் நடக்கும் அளவிலான ஓவன் ஒன்றிற்குள் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
குவியும் நன்கொடைகள்
குர்சிம்ரன் ஓவனுக்குள் இருக்கும்போது, ஓவன் இயக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓவனுக்குள் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார் அவர்.
ஆக குர்சிம்ரனுக்கு என்ன ஆனது, யாராவது அவர் உள்ளே இருப்பது தெரியாமல் ஓவனை இயக்கிவிட்டார்களா என்பது போன்ற விடயங்கள் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இதற்கிடையில், குர்சிம்ரன் குடும்பத்துக்கு உதவுவதற்காக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
50,000 டொலர்கள் இலக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நன்கொடைகள் வந்து குவிவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வியாழக்கிழமை மாலை 4.00 மணி நிலவரப்படி, குர்சிம்ரன் குடும்பத்துக்கு உதவுவதற்காக வந்து சேர்ந்துள்ள நன்கொடை 132,000 டொலர்களைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.