கனடாவில் சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றிவந்த இந்திய இளம்பெண்: விபத்தில் பலி
கனடாவில் சிறைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் விபத்தொன்றில் பலியானார்.
கனடாவில், கைதி ஒருவரை எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது நிகழ்ந்த விபத்தில், இந்தியப் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளார்கள்.
மூன்று பேர் பலி
வியாழக்கிழமையன்று, எட்மண்டனிலுள்ள பெண்கள் சிறையிலிருந்து, கியாரா மூஸ்வா (Kiara Mooswa, 24) என்னும் பெண் கைதியை வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை அதிகாரிகள் சில ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பயணித்த வேன், ஆல்பர்ட்டா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில், கியாராவும், சிறைத்துறை அதிகாரிகளான நிக்கோலே செர்பா (Nicolae Serban, 57) மற்றும் ரமன்தீப் கௌர் மான் (Ramandeep Kaur Maan, 25) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்கள்.
யார் இந்த ரமன்தீப் கௌர் மான்?
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான ரமன்தீப் கௌர் மான், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் ஆவார்.

சர்வதேச மாணவியாக கனடா வந்த ரமன்தீப் கௌர், ஆறு மாதங்களுக்கு முன்தான் சிறைத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |