17 வயதான இந்திய பெண்ணிற்கு கனடாவில் இருந்து கிடைத்த கோடிக்கணக்கான பணம்! எப்படி தெரியுமா? சுவாரசிய தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய பெண்ணொருவர் மதிப்புமிக்க கனேடிய ஸ்காலர்ஷிப்பை வென்றுள்ளார்.
Oud Methaவில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவியான ராதா ஹரி (17) கனடாவில் உள்ள ஹூரான் பல்கலைக்கழகத்தில் இருந்து 77,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 2,70,38,303) ஸ்காலர்ஷிப்பாக வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ராதாவின் தலைமைத்துவம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் பணியை அங்கீகரிப்பதற்காக இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கேர்ள் அப் என்ற கிளப் என்ற சங்கத்தை ராதா நிறுவினார். இது மார்பக புற்றுநோய், மனநல பிரச்சினைகள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்ப்பட்ட சங்கமாகும்.
ராதா கூறுகையில், ஸ்காலர்ஷிப்பை பெறுவதன் மூலம், எனது பெற்றோரின் சுமையை குறைக்க முடியும். மேலும் இது எனது தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சிக்கு நிறைய கதவுகளைத் திறந்துள்ளது என கூறியுள்ளார்.