கனடாவில் இரயில் மோதியதில் 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழப்பு! இரவு நேரத்தில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்
கனடாவில் நேற்று முன் தினம் இரவு நடந்த விபத்தில் 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜசன் பிரீத் கவுர் (18) மற்றும் இன்னொரு இளம்பெண்ணுமே உயிரிழந்தவர்கள் ஆவார். இந்த சம்பவத்தில் ஜசன் பிரீத்தின் உறவுக்கார பெண்ணான பலம்ப்ரீத் கவுருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சம்பவத்தில் ஓட்டுனரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு அவர்கள் சென்ற கார் பிராம்ப்டன் அருகே உள்ள லெவல் கிராசிங்கில் சரக்கு ரயிலின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
விபத்து தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரும் கல்வி பயிலவும், ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் பணிபுரியவும் கனடாவுக்கு சென்றிருக்கின்றனர்.
இது குறித்து பலம்ப்ரீத் கவுர் தந்தை கூறுகையில், என் மருமகள் ஜசன் பிரீத் விபத்தில் உயிரிழந்தார், என் மகள் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னொரு பெண்ணும் விபத்தில் இறந்திருக்கிறார்.
ரயில்வே கிராசிங்கில் சிக்னலை டிரைவர் பார்க்காததால் இந்த விபத்து நடந்ததுள்ளது. சரக்கு ரயில் கார் மீது மோதியதால் காரானது ஒரு கி.மீ.க்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது என கூறியுள்ளார்.