3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பு கொண்ட GMR குழுமம்! யார் இந்த ராகினி கிரண் கிராந்தி?
இந்திய தொழில்துறையில் GMR குழுமத்தின் பங்கு அவர்களது குடும்ப உறவுகளை போல மிகப்பெரியது.
GMR குழுமம்
பல இந்திய கோடீஸ்வரர்கள், தங்கள் விரிவான தொழில் சாம்ராஜ்யங்களை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களை நம்பியிருக்கிறார்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் GMR குழுமம்.
இது, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புள்ள இந்திய கோடீஸ்வரர் கிராந்தி மல்லிகார்ஜுன ராவ் (ஜி.எம். ராவ்) என்பவரால் நிறுவப்பட்டது.
ராகினி கிரண் கிராந்தி
GMR குழுமத்தில் முக்கிய நபராக திகழ்பவர் ராகினி கிரண் கிராந்தி(Ragini Kiran Grandhi).
இவர் ஜி.எம். ராவின் மருமகளும், ஐபிஎல் அணி டெல்லி கேபிட்டல்ஸின் இணை உரிமையாளர் கிரண் குமார் கிராந்தியின் மனைவியுமாவார்.
கிரண் குமார் கிராந்தி 1999 முதல் ஜிஎம்ஆர் குழும இயக்குரகமாக உள்ளார். தற்போது குழுமத்தின் நிதி மற்றும் நிறுவன மூலோபாய திட்டமிடல் பிரிவுகளை கவனித்து வருகிறார்.
ராகினி, குழுமத்தின் சமூக பொறுப்புத்துறை (CSR) கிளையான ஜிஎம்ஆர் வரலட்சுமி அறக்கட்டளையின் இயக்குநராக உள்ளார்.
GMR குழுமத்திற்கு அப்பால், ராகினி பரம்பரை குடும்ப வணிக நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.
கல்வியின் மீது ஆர்வம் கொண்ட இவர், GMR சின்மய வித்யாலய ஆளுகை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள தொழில்முனைவோர் அமைப்பு (EO) மற்றும் பெங்களூரில் உள்ள இளம் தலைவர்கள் அமைப்பு (YPO) ஆகியவற்றில் ராகினி தீவிர உறுப்பினராக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |