iPhone 16-ஐ வெறும் ரூ.27,000க்கு வாங்கிய இந்தியர்.! எப்படி?
iPhone 16 தொடரின் அறிமுகம் Apple தயாரிப்புகள் மீது மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் புதிய iPhone-ஐ முழு விலைக்கு வாங்கியிருந்தாலும், சில புத்திசாலி வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி தள்ளுபடியை பெற்றனர்.
இதில், ஒரு Reddit பயனர், 256 GB iPhone 16-ஐ வெறும் ரூ.27,000-க்கு வாங்கியதுடன் அதற்கான சான்றையும் பதிவிட்டதால் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
உண்மையில், iPhone 16-க்கான முறையான விலை ரூ. 89,900 ஆகும். ஆனால், அந்த பயனர் HDFC Infinia credit card மற்றும் அதில் இருந்த 62,930 ரூபாய் மதிப்புள்ள ரிவார்ட் பாயின்ட்ஸை பயன்படுத்தி, ரூ. 26,970 க்கு வாங்கியதாக குறிப்பிட்டார்.
இந்த பதிவின் மூலம் அவர் தனது செலவுகளை ஸ்மார்டாக நிர்வகித்திருப்பதையும், அதே நேரத்தில் அந்த கார்டை கடந்த செலவுகளுக்கு பயன்படுத்தாததை வருத்தமாகக் கூறினார்.
அதே நேரத்தில் மற்றொரு ரெடிட் பயனர், ஏன் கார்டைப் பயன்படுத்தியதை வருத்தமாக உணர்கிறீர்கள் எனக் கேள்வியிட்டார்.
அதற்கு, "நான் ஆபரணங்களை வாங்குவதற்கு Amazon Pay கார்டைப் பயன்படுத்தி 1% கேஷ்பேக் மட்டுமே பெற்றேன். ஆனால் Infinia கார்டில் அது கிடைக்காது என நினைத்தேன். ஆனால், உண்மையில் அது கேஷ்பேக் தருகிறது," என பதிலளித்தார்.
மேலும், 62,930 பாயின்ட்ஸை எவ்வளவு செலவு செய்த பிறகே பெற்றீர்கள் என ஒருவர் கேள்வியிட, அதற்கு அவர், “சுமார் 15 லட்சம் ரூபாய் செலவிட்டேன்,” என பதிலளித்தார்.
iPhone 16 தொடரில் iPhone 16, 16 Plus, 16 Pro, மற்றும் 16 Pro Max ஆகிய மாடல்கள் செப்டம்பர் 9-ஆம் திகதி அறிமுகமாகியுள்ளன. இதில், குறிப்பிட்ட முக்கிய அம்சமாக செயல்களை ஒரே click-ல் செய்யக்கூடிய ‘Action Button’ உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian Redditor, iPhone 16, iPhone 16 for just Rs.27,000, HDFC Infinia credit card