மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு அரசாங்கம் அளிக்கவுள்ள பெரிய மரியாதை! என்ன தெரியுமா?
மறைந்த பத்மஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு மரியாதை அளிக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவான் விவேக் அண்மையில் காலமானார். நடிகராக மட்டுமில்லாமல் இயற்கை ஆர்வலராகவும், சமூக சமூக செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார்.
நடிகர் விவேக் மறைந்த உடனேயே, இது குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தகவல் தெரிவித்துள்ளார், இதையடுத்து, விவேக் மறைவுக்கு, பிரதமர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார், எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார் பிரகாஷ் ஜாவடேகர். அதாவது சென்னையில் உள்ள, ஆல் இந்தியா ரேடியோ கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட ஸ்டாம்ப் வெளியிடலாம் என பிரதமரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டில், ஸ்டாம்ப் வெளியிடும் திட்டம் ஒப்புதல் பெற்று அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.