வாட்ஸ்அப் பயனர்கள் குறித்த தகவல்களை கேட்கும் இந்திய அரசு: காரணம் என்ன?
ஒன்லைன் செயலியான வாட்ஸ்அப் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க, இந்திய அரசு பயனர்களின் தரவுகளை கோரியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் மோசடி
சமூக வலைதள செயலிகளில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது வாட்ஸ்அப். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட வயதினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
போலியான தகவல்களை பரப்புதல், ஒன்லைன் மோசடிகளுக்கு வாட்ஸ்அப் பயனாளர்கள் ஆளாகும் நிலையும் ஒரு புறம் உள்ளது.
Reuters
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் அதன் பயனர்களின் தரவுகளை இந்திய அரசு கோரியுள்ளது. Deep Fake எனும் தொழில்நுட்பம் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகளின் முகத்தைப் பயன்படுத்தி பல்வேறு போலி வீடியோக்கள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
தனிப்பட்ட பாதுகாப்பு
இதனுடன் போராடுவதற்காகவே இந்திய அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது, தவறான வீடியோக்களையும, தகவல்களையும் கண்டறிய வேண்டும், எனவே அதனை முதலில் அந்த செய்தியை பகிர்ந்தவரின் தகவலை பெற வேண்டும். இதனால் தான் அரசு கோரியுள்ளது.
ஆனால் வாட்ஸ்அப் நிறுவனமோ, பயனர்களின் தகவல்களை அரசுக்கு இவ்வாறு கொடுப்பது என்பது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை மீறுவதற்கு ஒப்பானது எனவும், இரு நபர்களுக்கு இடையே பேசப்படும் உரையாடல்கள் நிறுவனத்திற்கே தெரியாது எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, Call செய்யும்போது அவர்களின் IP Address-ஐ மறைத்து வைக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தப் போவதாகவும் வாட்ஸ்அப் கூறியது.
Dennis Jarvis/wikimedia
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |