120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய DeepFakeயில் கெடு விதித்த அரசு
இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சமூக வலைத்தளங்களுக்கு Deepfake தொழில்நுட்ப பிரச்சனையில் 7 நாட்கள் கெடு விதித்துள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை Deepfake தொழில்நுட்பம் மூலம் வேறொரு பெண்ணின் உடலுடன் பொருத்தி வீடியோ ஒன்று வெளியானது சர்ச்சையானது.
அதனைத் தொடர்ந்து கஜோல் உள்ளிட்ட இன்னும் சில பிரபலங்களின் புகைப்படங்களும் Deepfake தொழில்நுட்பத்தினால் மாற்றப்பட்டன.
இதனால் இந்த தொழில்நுட்பம் குறித்த விவாதம் விஸ்வரூம் எடுத்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் தற்போது இந்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு கெடு விதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் Deepfake விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் Deepfake போன்ற செயலிகள், இணையத்தை பயன்படுத்தும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, Deepfake போன்ற தொழில்நுட்பங்கள், போலி தகவல்கள் பரவுதல் போன்றவற்றை கட்டுப்படுத்த விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும்.
தவறான தொழில்நுட்பங்களை கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தகவல்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள்.
PTI
இதற்கான ஏற்பாடுகளை மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை செய்யும். இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் புகார் பதிவு செய்ய இணையதளம் உருவாக்கப்படும். விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், FIR பதிவு செய்வதில் அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
Stock image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |