இந்தியாவில் உயரும் பாஸ்போர்ட் கட்டணம் - எவ்வளவு? எப்போது முதல்?

India Passport
By Karthikraja Jun 26, 2026 08:10 AM GMT
Report

இந்திய வெளியுறவு அமைச்சகம், கடவுச்சீட்டு (திருத்த) விதிகள், 2026 மூலம் இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கான கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

கடைசியாக 2012 ஆம் இந்த கட்டணங்கள் திருத்தப்பட்ட நிலையில், தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு.உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமுலுக்கு வர உள்ளது.

பாஸ்போர்ட் புதிய கட்டண திருத்தம்

36 பக்க பாஸ்போர்ட்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போது ரூ.1,500 ஆக உள்ள நிலையில் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உயரும் பாஸ்போர்ட் கட்டணம் - எவ்வளவு? எப்போது முதல்? | Indian Govt Revises Passport Fees From July 1

இதே பாஸ்போர்ட்டை தட்கல் முறையில் விண்ணப்பிக்க தற்போது ரூ.3,500 ஆக உள்ள நிலையில் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

36 பக்க பாஸ்போர்ட் சேதமடைந்தாலோ அல்லது தொலைந்தாலோ புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.3,000 ஆக இருந்தது ரூ.5,000 ஆகவும், தட்கல் முறையில் ரூ.5,000 ஆக இருந்தது ரூ.7,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் தொடக்கம் - எங்கே தெரியுமா?

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் தொடக்கம் - எங்கே தெரியுமா?

60 பக்க பாஸ்போர்ட்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 60 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போது ரூ.2,000 ஆக உள்ள நிலையில் ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே பாஸ்போர்ட்டை தட்கல் முறையில் விண்ணப்பிக்க தற்போது ரூ.4,000 ஆக உள்ள நிலையில் ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - 3 கி.மீ தூரம் மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய்

60 பக்க பாஸ்போர்ட் சேதமடைந்தாலோ அல்லது தொலைந்தாலோ புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.3,500 ஆக இருந்தது ரூ.6,000 ஆகவும், தட்கல் முறையில் ரூ.5,500 ஆக இருந்தது ரூ.8,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் சாதாரண முறையில் சாதாரண முறையில் ரூ.1,000 ஆக இருந்தது ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.2,000 ஆக இருந்தது ரூ.4,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

36 பக்க பாஸ்போர்ட் சேதமடைந்தாலோ அல்லது தொலைந்தாலோ புதிய பாஸ்போர்ட் பெற சாதாரண முறையில் ரூ.4,250, தட்கல் முறையில் ரூ.6,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO

எலோன் மஸ்க்கிற்கு அடுத்து... உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO

இதே போல், காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சரண்டர் சான்றிதழ் மற்றும் உலகளாவிய நுழைவுத் திட்ட சரிபார்ப்பு போன்ற இதர சேவைகளுக்கான கட்டணமும் இந்தியாவில் ரூ.500லிருந்து ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

india passport new fees

இதே போல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் அப்படியே தொடர்கிறது. ஜூலை 1 ஆம் திகதி முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய கட்டணங்களே பொருந்தும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US