வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை
indian government issues advisory regard using whatsapp web: கணினியை பயன்படுத்தும் பெரும்பாலானோர் அதில் தங்களது வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தி விட்டு, அதனை லாக்அவுட் செய்யாமல் அப்படியே வைத்திருப்பார்கள்.
இந்நிலையில், வாட்ஸ்அப் இணைய அமர்வை தீங்கிழைக்கும் நபர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என மத்திய அரசின் தேசிய இணையக் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு (NCTAU) அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப்
தனிப்பட்ட செய்திகளை வெளிப்படுத்துவதைத் தவிர, அத்தகைய அணுகல் ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி மோசடி, ஃபிஷிங் அல்லது பிற இணையக் குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும்.

இத்தகைய அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, பயனர்கள் ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும் முறையாக வெளியேற வேண்டும் (Logout) என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், குறிப்பாக அலுவலகக் கணினிகள், பகிரப்பட்ட கணினிகள், பொதுக் கணினிகள் அல்லது மற்றவர்கள் அணுகக்கூடிய சாதனங்களில் வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்தும்போது, அரசு, அலுவலக தகவல்கள், நிதி உள்ளிட்ட முக்கிய விடயங்களை பகிர வேண்டாம் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் வெப்பை தற்காலிகமாகப் பயன்படுத்த வேண்டியிருந்தால், நம்பகமான கணினியில் மறைநிலை (incognito) அல்லது தனிப்பட்ட (private) உலாவல் பயன்முறையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
தங்களது கணக்குகளிலிருந்து அனுப்பப்படும் எதிர்பாராத செய்திகள், தொடர்புகளிடமிருந்து வரும் வழக்கத்திற்கு மாறான பதில்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைக் குறிக்கக்கூடிய பிற செயல்பாடுகள் குறித்து பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.