ஹேக் செய்யப்பட கனேடிய இராணுவ இணையதளம்; பொறுப்பேற்ற இந்திய சைபர் படை
கனேடிய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்ததற்கு இந்திய ஹேக்கர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பிரித்தானிய ஊடகமான ‘தி டெலிகிராப்’ இதனைத் தெரிவித்துள்ளது.
கனடியப் படைகளின் இணையதளம் வியாழன் பிற்பகல் செயலிழந்தது. இதற்குப் பிறகு, இந்திய சைபர் ஃபோர்ஸ் என்ற குழு இதற்குப் பொறுப்பேற்று, ஸ்கிரீன் ஷாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டது.
இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்ததை அடுத்து, இம்மாதம் 21ஆம் திகதி, 'எங்கள் பலத்தை உணர தயாராகுங்கள்' என்று இந்திய சைபர் ஃபோர்ஸ் ஹேக்கிங் மிரட்டல் விடுத்தது. இதற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கனேடிய ஆயுதப் படைகளின் இணையதளம் செயலிழந்துள்ளது என்று தேசிய பாதுகாப்புத் துறையின் ஊடக உறவுகளின் தலைவர் டேனியல் லு பொட்டிலியர் தெரிவித்தார்.
ஹேக் செய்யப்பட்ட இணையதளம் ராணுவத்தின் மற்ற தளங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும் பெரிய அளவில் பிரச்னைகள் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக கனடியப் படைகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India Canada tension, Indian hackers, Canadian Armed Forces, Indian Cyber Force, Canada Army website hacked