கோல் மழை பொழிந்த இந்திய ஹாக்கி அணி: 5-0 கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா-ஜப்பான் மோதல்
இந்தியாவின் சென்னையில் உள்ள எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன் கோப்பை நடந்து வருகிறது.
அந்த வரிசையில் இன்று இரவு 8:30 மணிக்கு நடைபெற்ற ஆசிய சாம்பியன் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஜப்பான் ஹாக்கி அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இந்நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி தங்களது ஆதிக்கத்தை காட்டத் தொடங்கினர்.
#WATCH | Chennai, Tamil Nadu: On winning the semi-finals of the Asian Champions Trophy, Indian Hockey player Sumit says, "It is not just because of my goal that we won, it is the entire team's contribution...Winning the finals is more important & we will focus on that..." pic.twitter.com/squbSxwKAJ
— ANI (@ANI) August 11, 2023
இரண்டாவது பாதியில் மட்டும் இந்திய வீரர்கள் 5 கோல்களை அடித்து ஜப்பான் ஹாக்கி அணிக்கு சிம்ம சொப்பனமாக மாறினர்.
இறுதியில் போட்டி நேர முடிவில் இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
அத்துடன் 7வது ஆசிய சாம்பியன் கோப்பைக்கான தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |