பிரான்ஸில் 303 பயணிகளுடன் 3 நாள் நிறுத்தப்பட்ட விமானம்: இந்தியா திரும்புவதற்கான காரணம் என்ன?
மனித கடத்தல் புகாரில் 303 பயணிகளுடன் பிரான்ஸ் நாட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
303 இந்திய பயணிகளுடன் நிறுத்தப்பட்ட விமானம்
சுமார் 303 பயணிகளுடன் துபாயில் இருந்து அமெரிக்கா நாடான நிகாராகுவாவுக்கு சென்ற விமானம் பிரான்ஸ் வட்ரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் எரிப்பொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட விமானம், பின்னர் மனித கடத்தல் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
கிட்டத்தட்ட 3 நாட்கள் விமான நிலைய வளாகத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அதில் 2 பேரை மட்டும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இதனிடையே விமானத்தில் பயணித்தவர்களில் பலர் நிகாரகுவாவுக்கு சென்று அங்கிருந்து கனடா மற்றும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல இருந்ததாக தகவல் வெளியானது.
AP
இந்நிலையில் 303 இந்திய பயணிகளுடன் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்திய விமானம் பிரான்சை விட்டு இன்று வெளியேறலாம் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு திரும்பும் விமானம்
இந்நிலையில் 303 பயணிகளில் 301 பயணிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் திங்கட்கிழமை இந்தியாவின் மும்பை நேரடியாக திருப்பி அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடுத்து நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்களை பிரான்ஸ் நாட்டிலேயே அகதிகளாக ஏற்றுக் கொள்ளும்படி கோரிக்கை முன்வைத்து இருப்பதாக மார்னே பிராந்திய மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சில பயணிகள் தாங்கள் இந்தியாவிற்கு செல்ல விரும்ப வில்லை என்றும், ஏனென்றால் அவர்கள் நிகாராகுவாவுக்கு சுற்றுலா செல்ல கட்டணம் செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் மனித கடத்தல் தொடர்பான சாத்தியங்களை விமான நிறுவனம் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Plane grounded in France, human trafficking investigation, human trafficking, India, French airport, Indian citizens, smugglers, Nicaragua, Managua, Fujairah,United Arab Emirates, Mexico-US border,Christmas Eve,