கனடாவில் இந்திய இளம்பெண்ணைக் கொன்ற கணவர்: தண்டனை விவரம்
கனடாவில் தன் மனைவியை கொடூரமாக தாக்கிக் கொலை செய்த இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது தண்டனைக்காலம் முடிந்ததும், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
இந்திய இளம்பெண்ணைக் கொன்ற கணவர்
2024ஆம் ஆண்டு, கனடாவின் கால்கரியில் வாழ்ந்துவந்த மணிந்தர்பிரீத் சிங் (25), தன் மனைவியான மன்பிரீத் கௌரை (25) கொலை செய்தார்.

விடயம் என்னவென்றால், மன்பிரீத் கொல்லப்பட்டுக் கிடந்த வீடு முழுவதும் இரத்தம் தெறித்து, கொத்துக் கொத்தாக தலைமுடி இறைந்து கிடக்க, அவரது முகம், மூக்கு, உதடுகள், கன்னம், கழுத்து, காது ஆகிய உறுப்புகளில் கீறல்களும், மார்பு, இடுப்பு, தலை ஆகிய இடங்களில் ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்களும், தோள், கைகள், முதுகு, முழங்கால் மற்றும் விரல்களில் சிங் கடித்ததால் ஏற்பட்ட காயங்களும் இருந்தன.
மனைவியை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்ற வழக்கில் தற்போது சிங்குக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனைக்காலம் முடிவடைந்ததும் சிங் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளார்.
வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியான Melanie Gaston, சொந்த நாட்டை விட்டு வந்த நிலையில், கனடாவில் தனியாக திகிலுடன் நாட்களை செலவிட்டுவந்த மன்பிரீத், பல மாதங்களாக சிங்கிடம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேதனை அனுபவித்துவந்துள்ளார் என்பதை ஆதாரங்களும் சூழ்நிலையும் வெளிப்படுத்துவதாகவும், கடைசியாக அது அவரது கொலைக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |