அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து: விசா கிடைக்க போராடும் குடுபத்தினர்..,
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வரும் 28 வயதான இந்திய மாணவர் தாக்கப்பட்டார்.
ஐஐடி-மெட்ராஸில் பட்டம் பெற்ற பிறகு செப்டம்பர் 1-ஆம் திகதி சுபம் அவுஸ்திரேலியா சென்றார்.
அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த வாரம் 11 முறை கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்து வரும் ஐஐடி பட்டதாரியான 28 வயதான சுபம் கார்க் (Shubham Garg), அக்டோபர் 6-ஆம் திகதி தாக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவரது குடும்பத்தாருக்கு, தாக்குதல் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாக இன்று விசா வழங்கப்பட்டது. சுபம் அண்ணன் அவுஸ்திரேலியா செல்வதற்கு விசா வசதி செய்து தருமாறு அரசிடம் முறையிட்டனர்.
ஐஐடி-மெட்ராஸில் பட்டம் பெற்ற பிறகு செப்டம்பர் 1-ஆம் திகதி சுபம் அவுஸ்திரேலியா சென்றார்.
அக்டோபர் 6-ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் ஏடிஎம்மில் இருந்து பணத்துடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரிடம் பணம் கேட்டு நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். சுபம் பணம் மறுத்ததால், அவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓடினார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தீவிரமாகக் கையாளப்படும் மற்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுபத்தின் முகம், மார்பு மற்றும் வயிற்றில் பல காயங்கள் ஏற்பட்டன. அந்த நிலையில் அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சுபம் தனது அழைப்பிற்கு பதிலளிக்காததையடுத்து அக்டோபர் 8-ஆம் திகதி அவரது நண்பரை அழைத்தபோது தான் விடயத்தை அறிந்துகொண்டதாக அவரது தந்தை ராம்நிவாஸ் கார்க் கூறினார்.
பாதிக்கப்பட்ட சுபத்திற்கு வயிற்றில் 11 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
"எனது மகனின் சிகிச்சை மற்றும் எனது இளைய மகனுக்கு விசா வழங்க அரசு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவரது தந்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் 27 வயதுடைய நபரொருவர் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் யார் என்பது சுபத்திற்கு தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இது ஒரு இனவெறி தாக்குதல் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது.
Shubham Garg is admitted in RNSH Sydney after he was assaulted by a knife attack#UPDATE #ShubhamGarg stabbing: Family granted #visa to come to #Australia @EthnicLinkGuru pic.twitter.com/wnY8RRqp9e
— Satyaagrah (@satyaagrahindia) October 14, 2022
இதனிடையே, சிட்னியில் உள்ள இந்திய துணை தூதரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு தூதரக உதவியை வழங்கியுள்ளதாகவும், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் குடும்ப உறுப்பினருக்கான விசாவை எளிதாக்க உதவியுள்ளதாகவும் என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.