மகாராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியருக்கு பிரித்தானியாவில் வந்த சோதனை., மக்கள் ஆதரவு
பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்ட இந்தியர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ராணியால் கௌரவிக்கப்பட்டவர்
பிரித்தானியாவில், கோவிட்-19 தொற்றுநோய்களின்போது 50 குடும்பங்களுக்கு இலவச உணவை வழங்கியதற்காக, மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்டவர் 42 வயதான விமல் பாண்டியா.
சட்டப்பூர்வ விசா போரில் தோல்வியடைந்த அவர், இப்போது இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்.
Madhyamam
பாண்டியாவுக்கு ஆதரவாக முன்வந்த குழு
இதைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அடங்கிய ஒரு குழுவினர், விமல் பாண்டியாவுக்காக ஆதரவாக முன்வந்துள்ளனர்.
மாணவர் விசாவில் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்த விமல் பாண்டியாவுக்கு ஆதரவாக ஆன்லைன் மனு மூலம் Rotherhithe Residents குழு 177,000 கையெழுத்துக்களை சேகரித்துள்ளது.
“11 வருடங்களாக தான் வாழ்ந்த ரோதர்ஹிட் சமூகத்தின் மீது விமல் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை எப்பொழுதும் காட்டியுள்ளார். பல ஆண்டுகளாக அவரது உதவி மற்றும் ஆதரவால் எங்களில் பலர் பயனடைந்துள்ளோம், அதனால்தான் அவர் அநியாயமாக நாடு கடத்தப்படுவதைத் தடுக்க நாங்கள் போராடுகிறோம், ”என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Twitter
படிப்பு விசா விசாவில் வந்தார்
விமல் பாண்டியா 2011-ல் இந்தியாவிலிருந்து படிப்பு விசாவில் பிரித்தானியா வந்தார், ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிதியுதவி செய்யும் அவரது கல்லூரியின் உரிமையை ரத்து செய்தது.
தெற்கு லண்டனில் உள்ள ரோதர்ஹித்தேயில் வசிக்கும் பாண்டியா, பிரித்தானியாவில் 11 வருடங்களை கழித்துள்ளார். சமீபத்தில், அவர் குடிவரவு தீர்ப்பாயத்தில் ஒரு விசாரணையை இழந்தார், இப்போது அடுத்த சண்டைக்காக அவரது வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
அவர் சேர்ந்த கல்லூரி ஸ்பான்சர்ஷிப் உரிமையை இழந்துவிட்டதாக பிரித்தானிய எல்லைப் படை அதிகாரிகள் அவருக்குத் தெரிவித்தனர், ஆனால் கல்லூரியோ அல்லது உள்துறை அலுவலகமோ இதை அவருக்குத் தெரிவிக்கவில்லை. பாண்டியாவுக்கு ஆதரவாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.