கனடாவில் இந்திய ஐ.டி ஊழியர் சுட்டுக் கொலை: திடுக்கிட வைக்கும் பின்னணி காரணம்
கனடாவில் இந்தியாவை சேர்ந்த ஐடி ஊழியர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர் சுட்டுக் கொலை
கனடாவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 37 வயது இந்தியர் சந்தன் குமார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு புறநகர் நெலமங்களாவின் தியாமகொண்டலு கிராமத்தை சேர்ந்த சந்தன் குமார் கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக ஐ.டி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
Indian origin man shot dead in Toronto
— India First Post (@ifpost47) February 9, 2026
Chanda Kumar (37), originally from Karnataka & living in Canada for 6 years, was gunned down in broad daylight at Woodbine Shopping Centre.
Multiple shots fired at his vehicle. Investigation underway. pic.twitter.com/NHYWCb3FQW
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டொராண்டோவில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் ஐ.டி ஊழியர் சந்தன் குமார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தன் குமார், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம்
சந்தன் குமார் கனடாவில் ஒரு கன்னட சங்கம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.
இந்த சங்கத்தை நடத்தி வந்ததன் காரணமாகவே சந்தன் குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

“கனடாவிற்கு சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது எனவே இந்தியாவுக்கு திரும்புமாறு அழைத்தும் சந்தன் திரும்பவில்லை, சந்தனுக்கு இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படும் என்று கனவில் கூட நினைக்கவில்லை” என்று அவரது தந்தை நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
சந்தன் குமாரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய இந்திய அரசு உதவ வேண்டும் என்றும் தந்தை நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |