பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்: சிறையில் அடைத்த பொலிஸார்
பேஸ்புக் காதலியை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்ற இந்திய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதல் பாபு என்ற இளைஞர், பாகிஸ்தானைச் சேர்ந்த சனா ராணி(21) என்ற பெண்ணுடன் 2.5 ஆண்டுகள் பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சனா ராணியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தான் சென்ற அவரை பாகிஸ்தான் பொலிஸ் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சனா ராணியை விசாரித்த பொலிஸார், பாதல் பாபுவை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த பெரும் அதிர்ச்சிக்கு மத்தியில், சட்டவிரோதமாக எல்லை தாண்டியதற்காக பாதல் பாபு மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |