ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா கூறியது
இந்திய நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்தவிருப்பதாக ஆளும் கட்சி கூறியது. அதற்கு எதிர் கட்சிகளும் ஒப்புதல் தெரிவித்தது.
அதன்படி நேற்று நடந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக மக்களவையில் இன்று பகல் 12 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட சுலைமான் உள்பட 3 பயங்கரவாதிகள் நேற்று கொல்லப்பட்டனர். அவர்களை ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து சுட்டுக் கொன்றது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |