மிகப்பெரிய பழிவாங்கல்.., ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை தொட்டிகளாக மாற்றிய இந்திய மன்னர்
இந்திய மகாராஜாக்கள் தங்கள் துணிச்சலுக்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் பழிவாங்கலுக்கும் பிரபலமானவர்கள் தான்.
வரலாற்று பழிவாங்கல்
அதற்கு எடுத்துக்காட்டாக இங்கு ஒரு மன்னர் ஒருவர் லண்டன் ஷோரூமில் மோசமான வாடிக்கையாளர் சேவைக்கு பழிவாங்கும் விதமாக குப்பை சேகரிப்புக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த மன்னர் ஊழியர்களைப் பழிவாங்க முடிவு செய்தது பெரிதளவில் பேசப்பட்டது. அந்த மன்னரின் பெயர் மகாராஜா ஜெய் சிங் பிரபாகர். இவர் ஆல்வாரின் ஆட்சியாளராக இருந்தார்.
இந்த மகாராஜா ஜெய் சிங் பிரபாகர் 1930 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ஒரு ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு வருகை தந்தார். ஆனால், அவரது சாதாரண தோற்றத்தை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அவரை வெளியேற்றினர்.
தனது ஆடைக்காக திருப்பி அனுப்பப்பட்ட மகாராஜா ஜெய் சிங் அரச உடையில் ஷோரூமுக்கு மீண்டும் செல்வதற்கு முடிவு செய்தார். மேலும் அவர்களின் ஷோரூமிலிருந்து ஆறு வாகனங்களை வாங்கினார்.
பின்னர் அவர்களை பழிவாங்கும் விதமாக வாகனங்களை இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்பி, தெருக்களை சுத்தம் செய்யவும், குப்பைகளை சேகரிக்கவும் தனது ஊழியர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் 1906 இல் நிறுவப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ், அதன் ஊழியர்களின் நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு, மன்னருக்கு கூடுதல் வாகனங்களை இலவசமாக வழங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |