பாழடைந்த வீடு முதல் ஆடம்பர மாளிகை வரை.., இந்தியர் ஒருவரின் வெற்றி பயணம்
தனது சிறிய வயதில் சிறிய வீட்டில் இருந்த நபர் ஒருவர் தற்போது துபாயில் ஆடம்பர மாளிகையில் வாழ்ந்து வருவதற்கான வெற்றி கதையை பார்க்கலாம்.
இந்தியரின் வெற்றி பயணம்
இந்திய மாநிலமான ஒடிசாவின் ரூர்கேலாவைச் சேர்ந்த மிகவும் வெற்றிகரமான தொழில்முனைவோரான சௌமேந்திர ஜெனாவின் (Soumendra Jena) வாழ்க்கையை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த கதையானது சௌமேந்திர ஜெனாவின் சாதாரண குழந்தைப் பருவத்தில் இருந்து துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணக்கார, ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கான பயணத்தை காட்டுகிறது.
இவர் தனது வெற்றிக் கதையை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இது அவரது கடின உழைப்பு மற்றும் அசாதாரண வெற்றியை அடைய முடியும் என்ற செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக தெரிகிறது.
அவர் தனது பதிவில், "இது அப்போது எனது வீடு. இது ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலாவில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இங்கு நான் பிறந்து, வளர்ந்து, 12 ஆம் வகுப்பு வரை படித்தேன் (1988-2006). நினைவுகளுக்காக 2021 இல் மீண்டும் பார்த்தேன்.
ஆனால், இன்று, துபாயில் உள்ள எனது வீடு, 17 வருட அயராத உழைப்பு, தூக்கமில்லாத இரவுகள், குறுக்குவழிகள் இல்லாத கதையை சொல்கிறது" என்று கூறியுள்ளார்.
அதோடு அந்த பதிவில், ரூர்கேலாவில் உள்ள அவரது சிறிய, வெளித்தோற்றத்தில் பாழடைந்த சிறுவயது வீட்டை காண்பிக்கிறார்.
அதேபோல, துபாயில் உள்ள அவரது தற்போதைய ஆடம்பர மாளிகையையும் காண்பிக்கிறார். ஆடம்பர வீட்டின் முன்பு போர்ஸ் டெய்க்கன் (Porsche Taycan) மற்றும் ஜி வேகன் ப்ராபஸ் 800 (G Wagon Brabus 800) முன் நிறுத்தப்பட்டுள்ளது.
இவரை இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். அங்கு அவர் எளிமையான நிதிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் விவேகமான நிதி முடிவுகளை எடுப்பதில் பார்வையாளர்களுக்கு உதவுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |