19 வயதில் தொழில் தேடிய இந்தியர் இன்று ரூ.16,400 கோடிக்கு அதிபரான கதை
தன்னுடைய 19 வயதிலேயே மும்பைக்கு வந்த வேதாந்தா குழுமத்தின் தலைவர் அணில் அகர்வாலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
அணில் அகர்வால்
வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வால், இந்தியவில் உள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், பள்ளிக்கல்வி முடித்திருந்தாலும் கல்லூரி பக்கமே செல்லாமல் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார்.
இவருடைய தந்தை பீகாரில் அலுமினியம் கண்டக்டர்களை உற்பத்தி செய்யும் மிகச்சிறிய ஆலையை நடத்தி வந்தார். இவர், தனது பள்ளிக்கல்வியை பீகார் மாநிலம், பாட்னாவில் படித்தார்.
பின்பு, கல்லூரி படிப்பை தொடராமல் நிறுத்திவிட்டார். இதன்பிறகு, தனது தந்தையின் தொழிலில் நேரடியாக அனில் அகர்வால் இறங்கினார்.
19 வயதில் தொழில் தொடங்க மும்பை பயணம்
அனில் அகர்வால் தன்னுடைய 19 வயதில் வணிகத்திற்காக மும்பைக்கு சென்றார். இவருடைய, இந்த பயணமானது 1970 -ம் ஆண்டு முதல் தொடங்கியது. இவர், மும்பையில் கேபிள் நிறுவனங்களிடமிருந்து பயன்படாத பழைய கேபிள்களை வாங்கி வந்து விற்பனை செய்து லாபம் பெற்று வந்தார்.
பின்பு, 1976 -ம் ஆண்டு Shamsher Sterling Corporation என்ற நிறுவனத்தை வாங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் காப்பர் உற்பத்தியை அணில் அகர்வால் தொடங்கினார். இதனிடையே, தனது கேபிள் தொழிலையும் நிறுத்தவில்லை.
வேதாந்தா குழுமம்
அதே ஆண்டில் வேதாந்தா குழுமத்தை வெற்றிகரமாக தொடங்கினார் அணில் அகர்வால். பின்னர், 1986 -ஆம் ஆண்டு ஜெல்லியுடன் கூடிய கேபிள் வயர்களை இவரது நிறுவனமே உற்பத்தி செய்தது.
மேலும், நிறுவனத்திற்கு தேவையான உலோகத்தை இவரது நிறுவனத்திலேயே உற்பத்தி செய்வதால் செலவுகள் குறைந்தது. இதன் பிறகு 1993 -ம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் உருக்காலையை தொடங்கினார்.
அடுத்ததாக, மெட்ராஸ் அலுமினியம் என்ற நிறுவனத்தை வாங்கினார். இதன் பின் பால்கோ நிறுவனத்தில் 51 சதவீதம் பங்குகளையும், ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தில் 65 சதவீத பங்குகளையும் கைப்பற்றினார்.
அடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் Cairn நிறுவனத்தையும் கைப்பற்றினார். அப்போதிலிருந்து இவருடைய தொழில்கள் விரிவடைய தொடங்கியது.
தனது சொத்தில் 75 சதவீத பங்குகளை தர்ம காரியங்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். தற்போது, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, இவரது சொத்து மதிப்பு ரூ.16,400 கோடி ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |