அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு கிடைத்த கவுரவம்! குவியும் வாழ்த்துக்கள்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கணித மேதை நிகில் ஸ்ரீவத்சவாவுக்கு மிகப் பெரிய விருதான சிப்ரியான் போயாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி அமெரிக்க கணித மேதை மற்றும் ஆசிரியர் நிகில் ஸ்ரீவத்சவா பணிபுரிந்து வருகிறார் இவர், உலக அளவில் தீர்க்க முடியாத பல கணித புதிர்களுக்கு தீர்வு கண்டுபிடித்து மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில், அமெரிக்க கணிதவியல் அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் சிப்ரியான் போயாஸ் விருதுக்கு நிகில் ஸ்ரீவத்சவா தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதில் நிகில் ஸ்ரீவத்ஸவா தவிர மார்க்கஸ் மற்றும் டேனியல் ஸ்பெயின்மேன் ஆகிய கணித பேராசிரியர்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலினாமியல்ஸ் மற்றும் காடிசன் சிங்கர் பிராப்ளம் பண்புகள் இரண்டாம் பகுதி என்கிற தலைப்பில் இவர்கள் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கைக்காக இந்த மூன்று கணித மேதைகளுக்கு அவர்களது கணித அறிவை பாராட்டி இந்த விருது வழங்கப்படவுள்ளது.
கடந்த 1959-ஆம் ஆண்டு ரிச்சர்ட் காடிசன் மற்றும் இசடோர் சிங்கர் ஆகியோர் உருவாக்கிய பேவிங் பிராப்ளம் என்ற சிக்கலான ஓர் கணித புதிருக்கு இவர்கள் தங்கள் ஆய்வு மூலமாகத் தீர்வு கண்டுபிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.