லண்டனில் வீட்டிலேயே விமானத்தை உருவாக்கி குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்துவரும் இந்தியர்!

London Kerala Viral Photos Flight Indian Origin
By Ragavan Jul 27, 2022 07:38 AM GMT
Report

லண்டனில் வசிக்கும் இந்தியர் ஒருவர் சொந்தமாக தனது வீட்டிலேயே நான்கு இருக்கைகளைக் கொண்ட விமானத்தை உருவாக்கி, அதில் குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து வருகிறார்.

கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் அசோக் அலிசெரில் தாமரக்ஷன். அவர் தனது முதுகலை பட்டப்படிப்பைத் தொடர 2006-ல் பிரித்தானியாவிற்கு சென்றார், அங்கு அவர் தற்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

லண்டனில் வசித்துவரும் அசோக் அலிசெரில் தாமரக்ஷன், கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது குடும்பத்துடன் பயணிக்க சிறிய விமானத்தை தனது வீட்டியிலேயே உருவாக்கினார். அதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் எடுத்துக்கொண்டார்.

நான்கு இருக்கைகள் கொண்ட விமான மாடலான “Sling TSI”க்கு “G-Diya” என்று பெயரிடப்பட்டுள்ளார். தியா என்பது அவரது இளைய மகளின் பெயர் என்று கூறப்படுகிறது.

லண்டனில் வீட்டிலேயே விமானத்தை உருவாக்கி குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்துவரும் இந்தியர்! | Indian Man Built Own Homemade Flight London

விமானி உரிமம் பெற்றவரான அசோக் அலிசெரில், இதுவரை ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு நான்கு இருக்கைகளில் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார்.

ஒரு விமானத்தை உருவாக்கும் யோசனை எவ்வாறு வந்தது என்பதைப் பற்றி கூறிய அசோக், "ஆரம்பத்தில், 2018-ல் எனது பைலட் உரிமத்தைப் பெற்ற பிறகு பயணங்களுக்கு இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தை வாடகைக்கு எடுத்தேன். ஆனால் எனது குடும்பத்தில் எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர், எனக்கு நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் தேவைப்பட்டது. ஆனால் அவை அரிதானவை, நான் ஒரு விமானத்தி வாங்க நினைத்தாலும், அவை மிகவும் பழமையானதாக இருந்தன" என்றார்.

சரியான நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள இந்தச் சிரமம், ஊரடங்கின் போது அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்தது.

லண்டனில் வீட்டிலேயே விமானத்தை உருவாக்கி குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்துவரும் இந்தியர்! | Indian Man Built Own Homemade Flight London

38 வயதான அவர் தனது சொந்த விமானத்தை உருவாக்க, ஜோகன்னஸ்பர்க்கை தளமாகக் கொண்ட ஸ்லிங் ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு 2018-ஆம் ஆண்டு ஸ்லிங் டிஎஸ்ஐ என்ற புதிய விமானத்தை அறிமுகப்படுத்துகிறார்கள் என்பதை அறிந்த அவர், தொழிற்சாலைக்குச் சென்று அவரது சொந்த விமானத்தை உருவாக்காத தேவையான kit-ஐ அங்கிருந்து ஆர்டர் செய்தார்.

கோவிட் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் நிறைய நேரம் கைவசம் இருந்ததால், இந்த காலகட்டத்தில் சேமிக்கப்பட்ட பணம் அவருக்கு லட்சிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியது. இந்த விமானத்தை உருவாக்க மொத்தம் இந்திய ரூபாய் 1.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அசோக் அலிசெரில் தாமரக்ஷன், கேரளாவின் முன்னாள் எம்எல்ஏ ஏவி தாமரக்ஷனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US