கனடா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்திய வம்சாவளி நபர் மரணம்
கனடா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 8 மணி நேரம் காத்திருந்த இந்திய வம்சாவளி நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
44 வயதான பிரஷாந்த் ஸ்ரீகுமார், கடுமையான மார்பு வலியால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை செய்யப்படாமல் 8 மணி நேரம் வலியுடன் போராடி உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் 22 அன்று, வேலை செய்யும் இடத்தில் மார்பு வலி ஏற்பட்டதால், பிரஷாந்த் தனது நண்பரின் உதவியுடன் Grey Nuns Community Hospital-க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலையின் அவசர அறையில் (emergency room) பதிவு செய்யப்பட்ட அவர், waiting area-வில் அமர வைக்கப்பட்டார்.

“Papa, I cannot bear the pain” என தந்தையிடம் கூறிய பிரஷாந்த், தனது வலியை 10-க்கு 15 என மதிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்கள் ECG சோதனை செய்தபோதும், “பெரிதாக எதுவும் இல்லை” எனக் கூறி, அவரை தொடர்ந்து காத்திருக்க வைத்துள்ளனர்.
வலி அதிகரிக்க, Tylenol மாத்திரை மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் அவரது இரத்த அழுத்தம் தொடர்ந்து உயர்ந்தது.
இறுதி தருணம்
8 மணி நேரம் கழித்து சிகிச்சை அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டபோது, பிரஷாந்த் தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மார்பைப் பிடித்து விழுந்தார்.
உடனடியாக CPR முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், எந்த பலனும் இல்லை.
பிரஷாந்த், தனது மனைவி மற்றும் 3, 10, 14 வயதுடைய மூன்று குழந்தைகளை விட்டுப் புரிந்துள்ளார்.
அதிகாரிகள் பதில்
வைத்தியசாலைக்கு சொந்தமான Covenant Health நிறுவனம், “நோயாளி பாதுகாப்பே எங்களின் முதன்மை” எனக் கூறி, இந்த சம்பவம் Chief Medical Examiner அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், கனடாவின் அவசரகால சிகிச்சை முறை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian-origin man dies Canada hospital 8-hour wait, Prashant Sreekumar chest pain ignored emergency room, Canada healthcare crisis delayed treatment patient death, Grey Nuns Community Hospital Edmonton tragedy, Papa I’m in pain last words Prashant Sreekumar, Covenant Health investigation Chief Medical Examiner probe, Canada emergency care response time criticism, Indian diaspora Canada healthcare challenges patient safety, Family left behind wife three children Edmonton case, Canada hospital delay raises global health concerns