வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய இந்தியர்... உதவி கேட்டு மனைவி விடுத்த கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் கார் விபத்தில் சிக்கி மிக மோசமான மரணத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது அவரது மனைவி உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்
குறித்த நபரின் சடலத்தை இந்தியாவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என, அவரது மனைவி உதவி கோரியுள்ளார்.
@gofund
வெளியான தகவலின் அடிப்படையில், இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த Khusdeep Singh என்பவர் திங்களன்று இரவு சுமார் 11.15 மணியளவில் தென்மேற்கு மெல்போர்னில் பால்மர்ஸ் சாலை ஊடாக தமது வாகனத்தில் பயணித்துள்ளார்.
அவரது வாகனம் சாலை இரண்டாக பிரிந்து செல்லும் பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் பலமுறை உருண்டுள்ளது. தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவரசர உதவி மருத்துவக் குழுவினர், அவரை மீட்டு, மருத்துவ உதவி அளித்துள்ளனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றே கூறியுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும்
இந்த நிலையில் குஷ்தீப் சிங் சடலத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உதவ முன்வருமாறு அவரது மனைவி Japneet Kour கோரிக்கை விடுத்துள்ளதுடன், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளார்.
@autoday
தமது கணவர் மெல்போர்னில் லொறி சாரதியாக பணியாற்றி வந்துள்ளதாக கூறும் Japneet Kour, இந்த இக்கட்டான சூழலில் பொதுமக்கள் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் மெல்போர்னில் உள்ள ஒரு உணவு விடுதியில் வெளிப்புறத்தில் உணவருந்தியபடி இருந்த இந்திய குடும்பத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று மோதியதில், இரண்டு குடும்பத்தை சேர்ந்த 5 பேர்கள் பரிதாபமாக மரணமடைந்தனர். இதில் இருவர் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |